ராயல் என்பீல்டு வயித்துல புளியை கரைக்கும் புது பைக், ஒரு போட்டோ விட்டதுக்கே இன்டர்நெட் ஸ்தம்பிச்சு போயிருச்சு!
இந்திய மிட்-ரேஞ்ச் பைக் சந்தையில் ரசிகர்களின் மனதை வென்றிருக்கும் மோட்டார் சைக்கிள்களில் முக்கியமானது பஜாஜ் டோமினார். விறுவிறுப்பாக ஓடக்கூடியதோடு ஸ்டைலிஷ் லுக்கையும் தரும் இந்த பைக், அதே துறையில் உள்ள ராயல் என்பீல்டு மாடல்களை நேரடியாக போட்டியிடும் வகையில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில், 2025 பஜாஜ் டோமினார் பைக்கின் புதிய மாடல்களின் டீசர் புகைப்படம் வெளியாகியதும், இன்டர்நெட் தளங்களில் அதிர்ச்சியையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசர் புகைப்படம் பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. வெளியாகிய 1 புகைப்படத்திலேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாடல்களுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள பஜாஜ் டோமினார் பைக்குகள் இரண்டு வெர்ஷன்களில் உள்ளன – டோமினார் 250 மற்றும் டோமினார் 400. 2025 அப்டேட்களும் இதே இரண்டு வெர்ஷன்களை தழுவியிருக்கும். எஞ்சின் துறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்கிறார்கள். 250 சிசி மாடலில், 248.77cc லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 27 PS பவரும் 23.5 Nm டார்க்கும் தரக்கூடியதாக இருக்கும்.
அதேபோல், 400 சிசி மாடலில், 373.3cc இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 40 PS பவரையும் 35 Nm டார்க்கும் வழங்கும். இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும். இதனுடன், புதிய LCD இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மேம்பட்ட ஸ்விட்ச் கியர் போன்றவை கூட சேர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஜாஜ் நிறுவனம் தனது டோமினார் பைக்குகளை ராயல் என்பீல்டை விட ‘முன்னேற்றமான தொழில்நுட்பம் கொண்ட பைக்’ என்ற வகையில் எப்போதும் பிரமோட் செய்து வந்துள்ளது. அதற்கேற்பவே, இந்த மாடலிலும் அதிகப்படியான டெக்னாலஜிகள், மேம்பட்ட வசதிகள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பஜாஜ் தயாராகி வருகிறது.
2025 பஜாஜ் டோமினார் பைக்கின் வெளியீடு மற்றும் விற்பனைக்கு வரும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை. இருப்பினும், டீசர் வெளியானதைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே இந்த புதிய மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என வாகன வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளன.
இது மட்டுமல்லாமல், இந்த புதிய டோமினார் மாடல்கள், ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் ஈடுபடும் என்பதால், எதிர்காலத்தில் இந்திய பைக் சந்தையில் ஒரு திகிலான போட்டி உருவாகும் என்பதற்கே இடமளிக்கிறது.