OYO Hotel in Train Video: ரயில் பெட்டியை OYO ஹோட்டலாக மாற்றிய ஜோடி! பயணிகள் முன்னிலையில் முகம் சுளிக்க வைத்த செயல்! அதிர்ச்சி வீடியோ!
ரயில் பயணம் என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம். மலிவான கட்டணம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இருப்பதால், தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் சேவையை நம்பியுள்ளனர். இந்திய ரயில்வே நிர்வாகம் சுமார் 13,000 ரயில்களை இயக்கி, மக்களின் பயணத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
ஆனால், சிலரின் சுயநலத்தால், ரயில்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சில வீடியோக்கள், ரயில் பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
ரயிலை ஓயோ ஹோட்டலாக பயன்படுத்தும் கலாச்சாரம்!
சமீப காலமாக, ரயில்களில் முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, காதல் ஜோடிகள் ரயிலின் கழிப்பறைகளையும், பொது இடங்களையும் தனிப்பட்ட இடங்களாக மாற்றி தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சில தினங்களுக்கு முன்பு, ஒரு ரயில் கழிவறையில் இருந்து ஒரு இளைஞனும், சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு இளம் பெண்ணும் வெளியே வரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், “இன்றைய இளைஞர்கள் தற்காலிக சுகத்துக்காக வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள். ரயிலையே ஓயோ ஹோட்டலாக மாற்றிவிட்டார்களே?” என்று கடுமையாக விமர்சித்தனர்.

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், சில நெட்டிசன்கள் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் வீடியோ பதிவு செய்யப்பட்டது மனித உரிமை மீறல் என்று கருத்து தெரிவித்தனர். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது தவறு என்றாலும், தனிநபர்களின் தனியுரிமையை மீறுவதும் தவறே என வாதிட்டனர். இந்த விவாதம் சமூக வலைத்தளங்களில் நீண்ட நாட்கள் நீடித்தது.
ஸ்லீப்பர் கோச்சில் ஜோடியின் அத்துமீறல்!
மேற்கண்ட சம்பவத்தைவிடவும் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. திவ்ய குமாரி என்ற பயனர் பதிவேற்றிய அந்த வீடியோவில், ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில், பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சுற்றியிருக்க, ஒரு பெண்ணின் மீது ஆண் ஒருவர் படுத்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த பெண்ணும் அந்த நபரின் தலையை வருடி விடுகிறார். இந்த செயல், மற்ற பயணிகளின் மத்தியில் பெரும் சங்கடத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பொது இடத்தில் இப்படி நடந்து கொள்வது ஒழுங்கீனம்” என்று கடுமையாக சாடி வருகின்றனர். மேலும் சிலர், “இதுபோன்றவர்களை உடனே காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களால்தான் பொது இடங்களில் அசுத்தம் பரவுகிறது” என்றும் கருத்து தெரிவித்தனர்.
ரயில் அதிகாரிகள் பொதுப் போக்குவரத்தில் தனிப்பட்ட இடத்தை மதிப்பது மிகவும் அவசியம் என பலமுறை எச்சரித்துள்ள போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது ரயில்வே பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
பொது இடங்களில் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பேணிக்காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். ரயில் பயணம் என்பது பலதரப்பட்ட மக்கள் கூடும் பொது இடமாகும். இங்கு இதுபோன்ற தனிப்பட்ட செயல்கள் மற்றவர்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கிறது.
இந்த சம்பவங்கள், சமூகத்தின் மதிப்புகள் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளன என்பதைப் பிரதிபலிக்கின்றன. ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.