Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
What's Hot

Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!

June 1, 2026

RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!

June 1, 2026

என் வாழ்க்கையை மாற்றியது SRH! நெகிழ்ச்சியில் ஹென்ரிச் கிளாசன்!

June 1, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!
  • RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!
  • என் வாழ்க்கையை மாற்றியது SRH! நெகிழ்ச்சியில் ஹென்ரிச் கிளாசன்!
  • Australia ODI Squad: பாகிஸ்தான் எல்லாம் ஒரு டீமா? ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவால் கதறும் பாக். ரசிகர்கள்!
  • CSK அணி தோனி இடையே கருத்து வேறுபாடா? அணியில் தொடர்வாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அதிரடி விளக்கம்!
  • India W vs England W 1st T20: இங்கிலாந்து மண்ணில் வீராங்கனைகள் ருத்ரதாண்டவம்! உலகக்கோப்பைக்கு முன் இங்கிலாந்தை கதறவிட்ட இந்திய மகளிர் அணி!
  • 15 வயதில் கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்த வைபவ்! ஆனால் கடைசியில் நடந்த அந்த சோகம்!
  • Delhi Capitals to Release Kuldeep Yadav: எவ்ளோ பெரிய பவுலரா இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்! குல்தீப் யாதவை கழட்டி விட DC அதிரடி முடிவு!
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Saturday, June 13
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»Cricket»1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி
Cricket

1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி

PrabhakaranBy PrabhakaranJuly 6, 2025No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி
1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை!. 1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 64/1 ரன் எடுத்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டத்தில் நிதானமாக ஆடிய ராகுல் (55) அரைசதம் கடந்தார். பின் இணைந்த ரிஷாப் பன்ட், கேப்டன் சுப்மன் கில் ஜோடி நம்பிக்கை தந்தது. டங் வீசிய 40வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் கில். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பன்ட், 48 பந்தில் அரைசதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது பஷிர் ‘சுழலில்’ பன்ட் (65) சிக்கினார்.

1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி
1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி

சுப்மன் கில், தனது 8வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ரூட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரவிந்திர ஜடேஜா, அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய சுப்மன் கில், ரூட் பந்தை சிக்சருக்கு அனுப்பி 150 ரன்னை எட்டினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 175 ரன் சேர்த்த போது பஷிர் பந்தில் கில் (161) அவுட்டானார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 427/6 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா (69), வாஷிங்டன் சுந்தர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின் 608 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 7 ஓவரில் 43/2 ரன் எடுத்து திணறியது. போப் (15), ரூட் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சிராஜ், ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து மண்ணில் அதிக சிக்சர் விளாசிய அன்னிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் (23 சிக்சர்) முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (17 சிக்சர்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (16) உள்ளனர்.

கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரில், அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார் சுப்மன் கில். இதுவரை 4 இன்னிங்சில், 519* ரன் குவித்துள்ளார். இதற்கு முன், விராத் கோலி 449 ரன் (எதிர்: ஆஸி., 2014-15) எடுத்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்திய அணி டெஸ்ட் மேட்ச் ஒன்றி அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே, 1000 ரன்களை கடப்பதும் இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்னதாக 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி மைதானத்தில் 916 ரன்களை அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்தநிலையில் இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Read more…

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Edgbaston Test Highlights Historic Test Match ICC World Test Championship 2025 India Record 1000 Runs in Test India vs England Test 2025 Indian Cricket History Subhman Gill Double Century
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!

June 1, 2026

RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!

June 1, 2026

என் வாழ்க்கையை மாற்றியது SRH! நெகிழ்ச்சியில் ஹென்ரிச் கிளாசன்!

June 1, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!

June 1, 2026

RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!

June 1, 2026

என் வாழ்க்கையை மாற்றியது SRH! நெகிழ்ச்சியில் ஹென்ரிச் கிளாசன்!

June 1, 2026

Australia ODI Squad: பாகிஸ்தான் எல்லாம் ஒரு டீமா? ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவால் கதறும் பாக். ரசிகர்கள்!

May 31, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.