Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Wednesday, October 28
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»அரசியல்»மதுராந்தகம் இடைத்தேர்தல்! விஜய்க்கு குறையாத பெண்கள் ஆதரவு.. ஆண்கள் ஓட்டு சிதறல்! நேரடி ரிப்போர்ட்
அரசியல்

மதுராந்தகம் இடைத்தேர்தல்! விஜய்க்கு குறையாத பெண்கள் ஆதரவு.. ஆண்கள் ஓட்டு சிதறல்! நேரடி ரிப்போர்ட்

PrabhakaranBy PrabhakaranSeptember 25, 2026No Comments5 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தல்! மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இப்போது தமிழக அரசியலின் உச்சக்கட்ட கவனத்தைப் பெற்றுள்ளது. இன்று மதியம் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

முதல்வர் விஜயின் வருகையை ஒட்டி மதுராந்தகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொதுமக்களின் உண்மையான மனநிலை என்ன, தேர்தல் களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நமது ஒன்இந்தியா தமிழ் செய்திக் குழு தொகுதிக்குள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டது.

களத்தில் நாங்கள் சந்தித்த மனிதர்கள், பேசிய பேச்சுகள், மக்கள் வெளிப்படுத்திய மனக்குமுறல்கள் அனைத்தும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த அனுபவமாக அமைந்தது. மதுராந்தகத்தின் தெருக்களில் நாங்கள் பார்த்ததும் கேட்டதும் இதோ..

போலீஸ் அதிகாரி வெளிப்படுத்திய ஆதங்கம்!

எங்கள் கள ஆய்வு மதுராந்தகம் நகரின் முக்கியச் சந்திப்பில் தொடங்கியது. முதல்வர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சார் லிப்ட் கிடைக்குமா.. இப்படி கேட்டுத்தான் எங்கள் காரில் அந்த இளம் போலீஸ் அதிகாரி ஏறிக்கொண்டார்.. முதல்வர் விசிட்டுக்காக ரிப்போர்டிங் போறீங்களா? யூ டியூப் சேனலா என்று கேட்டபடி வந்த அவர்.. நாங்கள் ஒன்இந்தியா என்றதும் மனம் திறந்து பேசினார்..

தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய அந்த அதிகாரி, ஆளும் தவெக அரசு மீதும், முதல்வர் விஜய் மீதும் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தற்போதைய அரசு செயல்பாடுகளில் எனக்குத் துளியும் திருப்தி இல்லை. சட்டம் ஒழுங்கு முதல் பல துறைகளிலும் பல தவறுகள் நடக்கின்றன. எல்லாவற்றையும் விட எனக்குப் பெரிய கோபம் என்னவென்றால், இந்த இடைத்தேர்தலே நடந்திருக்கக் கூடாது.

பொதுத்தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி கட்சி மாற வைத்து, அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததால் தான் இப்போது மக்கள் வரிப்பணத்தில் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த அநியாயத்தை மக்கள் பார்த்துகிட்டுதான் இருக்காங்க.. இப்போ பாருங்க கொடுமையான வெயில்ல பல ஊர்ல இருந்து போலீஸ் கூப்பிட்டுட்டு வந்து டியூட்டி போட்டு இருக்காங்க.. இதெல்லாம் யார் காசு.. இந்த சி.எம் தானே கஜானா காலின்னு சொன்னது” என்று வெடித்துப் பேசினார்.

அரசு எந்திரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் காவல்துறையிலேயே இப்படி ஒரு அதிருப்தி இருப்பது களத்தில் ஆரம்பத்திலேயே ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியது.

உச்சி வெயிலிலும் காத்திருந்த பெண்கள் படை

காவல்துறையின் அதிருப்தி ஒருபுறம் இருக்க, அதே சந்திப்பில் சுட்டெரிக்கும் மதிய வெயிலைப் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பெண்கள் சாலையின் இருபுறமும் நின்றுகொண்டிருந்தனர். மதியம் சுமார் 2 மணி அளவில் முதல்வர் விஜயின் வாகனம் அங்கு வரவிருந்ததால், காலை முதலே அவர்கள் வழிநெடுகக் காத்திருந்தனர்.

போலீஸ் அதிகாரி கூறிய கருத்துக்கு முற்றிலும் மாறான ஒரு காட்சியைக் களத்தில் பார்க்க முடிந்தது. அங்கே கூடியிருந்த பெண்கள் மத்தியில் ஆளும் தவெக மீதும், முதல்வர் விஜய் மீதும் அளவுகடந்த அன்பும் தீவிர நம்பிக்கையும் காணப்பட்டது.

எங்கள் செய்திக் குழு அங்கு நின்றிருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனித்தனியாகவும் குழுவாகவும் உரையாடியது. அவர்களில் சுமார் 90 சதவீதப் பெண்கள் அசைக்க முடியாத உறுதியுடன், “எங்கள் ஓட்டு விஜய்க்கு மட்டும்தான்” என்று ஒருமித்த குரலில் தெரிவித்தனர். வேட்பாளர் யார் என்பதெல்லாம்.. இடைத்தேர்தல் வருகிறது என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை!

“என்ன கஷ்டம் வந்தாலும் விஜய் தான் முக்கியம்”

அங்கிருந்த பெண்களிடம் அரசியல் சூழல், மின்தடைப் பிரச்சினை, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து நாங்கள் கேள்விகளை எழுப்பினோம். ஆனால், அவர்கள் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.

அங்கு நின்றிருந்த ஒரு மூத்த பெண்மணி பேசும்போது,

“கரண்ட் கட் ஆகுது, காய்கறி விலை ஏறிப்போச்சு, அரசாங்கத்துல சில குறை இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. இதெல்லாம் போன ஆட்சியில் கூட இருந்தது.. அவங்களுக்கு மாத்தி மாத்தி வாக்காளிச்சோம்ல.. எங்களுக்கு அதெல்லாம் பெருசா தெரியல. எங்களுக்கு விஜய் மேல தனி பாசம் இருக்கு. அவர் நல்லதே செய்வாருன்னு நம்புறோம். அவர் முகத்தைப் பார்த்தாலே போதும், எங்க குடும்பத்து ஓட்டு அவருக்குத்தான்” என்றார்.

மற்றொரு இளம் பெண் கூறும்போது:

“அரசியல் நிலவரம் எப்படி மாறினாலும் சரி, நாங்க தவெகவுக்குத்தான் ஓட்டுப் போடுவோம். விஜய் எங்களுக்குக் கொடுத்த நம்பிக்கை அதிகம். மற்ற கட்சிகளை விட அவர் புதிதாக ஏதோ நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கு.. இப்போ 4 மாதம் தானே ஆட்சி பண்ணி இருக்காங்க.. அதனால் அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்” என்று உறுதியாகக் கூறினார். பெண்கள் வாக்கு வங்கி முற்றிலும் விஜய் பக்கமே சாய்ந்திருப்பதை அந்த இடம் தெளிவாகக் காட்டியது.

ஆண்களின் எண்ணம் என்ன? மாறுபட்ட களப்பார்வை!

பெண்களின் நிலைப்பாடு இப்படி ஒருமுகப்பட்டு இருக்க, அந்தப் பகுதியிலிருந்த தேனீர் கடைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் கடைவீதிகளில் நின்றிருந்த ஆண்களிடம் நாங்கள் பேசியபோது முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தன. ஆண்கள் தங்களின் வாக்குகளைப் பிரித்துப் பேசத் தொடங்கினர்.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் அதிமுகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக இந்தத் தொகுதியை வென்றிருந்ததை அவர்கள் நினைவுகூர்ந்தனர். குறிப்பாக, அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று, பின்னர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு தவெகவுக்குத் தாவிய வேட்பாளர் மரகதம் குமரவேல் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர்.

“அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுவிட்டு, நான்கு மாதத்தில் பதவி ஆசைக்காக கட்சி மாறிவிட்டார். மக்களுக்குச் செய்த துரோகம் இது. இந்த இடைத்தேர்தலில் மரகதத்துக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட வேண்டும். அதனால் நாங்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்போம்.. கணிதா சம்பத்தான் எங்கள் சாய்ஸ்” என்று பெரும்பாலான ஆண்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

அதே சமயம், கணிசமான எண்ணிக்கையிலான ஆண்கள் திமுகவுக்கு வாக்களிக்க விரும்புவதாகக் கூறினர். “திமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் நல்ல நலத்திட்டங்களைச் செய்தது. தற்போது எதிர்க்கட்சியாகவும் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. அதனால் திமுக வேட்பாளருக்கு வாக்களிப்பதுதான் சரியான தேர்வாக இருக்கும்.. பரந்தாமன் சட்டசபைக்கு போன நல்லா பேசுவார்” என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

இறுதி நேரத்தில் மனமாற்றம் வருமா?

அதிமுக, திமுக என்று ஆண்கள் பிரிந்து நின்றாலும், அவர்கள் ஒரு முக்கியமான எதார்த்தத்தையும் ஒப்புக் கொண்டனர்.

“இப்போது நாங்கள் அதிமுக, திமுக என்று பேசினாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிலைமை மாறலாம். தவெக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் செய்து, பலரையும் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் இறங்கிவிட்டனர். முதல்வர் விஜயின் கவர்ச்சியும் அவர்களின் பிரச்சாரமும் இன்னும் சில நாட்களில் எங்கள் பகுதி ஆண்களின் மனநிலையை மாற்றினாலும் மாற்றலாம்.. விஜய்க்கு இன்று பிரச்சாரம் செஞ்சிட்டு போனதும் நிலைமை அவங்களுக்கு சாதகம் ஆகலாம்” என்று அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

களத்தின் இறுதி நிலவரம் யாருக்கு சாதகம்?

ஒட்டுமொத்தமாக மதுராந்தகம் தொகுதியை ஒரு சுற்று சுற்றிவிட்டுப் பார்த்ததில் சில முக்கியமான உண்மைகள் தெளிவாகத் தெரிகின்றன:

  • ஆண்கள் வாக்கு சிதறல்: ஆண்களின் வாக்குகள் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் தவெக என ஐந்து பக்கமும் பிரிந்து கிடக்கின்றன. எவருக்கும் முழுமையான பெரும்பான்மை வாக்குகள் ஆண்களிடம் இருந்து கிடைக்கவில்லை.
  • ஒற்றைத் திரளாக பெண்கள் வாக்கு: ஆனால், தொகுதி முழுவதும் பெண்களின் வாக்குகள் எந்தவித சலனமும் இல்லாமல் ஒரு பெரும் திரளாக ஆளும் தவெக பக்கமே குவிகின்றன.
  • தவெகவின் கை ஓங்க வாய்ப்பு: ஆண்களின் வாக்குகள் பலமுனைப் போட்டியில் சிதறிப் போகும்போது, பெண்களின் மொத்த வாக்குகளும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு சாதகமாக விழுந்தால், அது ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக மாறும்.

அரசு மீது சட்டஒழுங்கு, பாதுகாப்பு, மின் தடை உள்ளிட்ட சில மட்டங்களில் அதிருப்தி இருந்தாலும், பெண் வாக்காளர்களின் தீவிர ஆதரவு தற்போதைக்கு மதுராந்தகக் களத்தில் தவெகவிற்கே கூடுதல் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தேர்தல் நாள் நெருங்கும்போது இந்த சமன்பாடுகள் மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
மதுராந்தகம் இடைத்தேர்தல்!
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.