வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தத் தொடரில் இதற்கு முன் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், கேஎல் ராகுல் அடித்த அபார சதத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
இந்த தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் இழக்காமல் அடுத்தடுத்து அசத்தலான வெற்றிகளைப் பெற்றது.
இருப்பினும், தற்போதைய போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 25-வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது ராகுல் களம் இறங்கினார்.
ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய அவர், தொடக்கம் முதலே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 பந்துகளில் 129* ரன்கள் குவித்து அசத்தினார்.
இடைவேளையின் போது கேஎல் ராகுலின் இந்த சிறப்பான இன்னிங்ஸ் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “அவர் தனது இன்னிங்ஸை நகர்த்திய விதம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியது மிகவும் அபாரமாக இருந்தது.
நீங்கள் நீண்ட நாட்களாக பேட்டிங் செய்யாமல் இருக்கும்போது, தினமும் மற்றவர்கள் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்கும்போது, நீங்களும் உடனே களம் இறங்கி ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பயிற்சி பெற்றபோதிலும், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பேட்டைத் தொடக்கூட இல்லை.
இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நேரங்களில் நாம் அவசரப்பட்டு ஆரம்பத்திலேயே தவறு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் கேஎல் ராகுல் தனது அனுபவத்தின் மூலம் அதைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்” என்று கூறினார்.
“அவரிடம் திறமை எப்போதும் உள்ளது. அதோடு ஆட்டத்தின் இறுதிவரை அவர் களத்தில் இருந்தார். கேஎல் ராகுல் மூலமாக அணிக்குக் கிடைக்கும் பாதுகாப்பு அதுதான். அவர் தனது விக்கெட்டை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்.
அவர் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு வீரர், அவரைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே பேசுகிறோம். ஆனால் அவர் அணிக்குத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடி, அணிக்கு மிகவும் பயனுள்ளவராக விளங்குகிறார்.”

“அவரிடம் அனைத்து வகையான ஷாட்களும் உள்ளன, ஆனால் சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதற்காக அவர் தனது இயல்பான ஆட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது” என்றார். இது ராகுலின் ஒன்பதாவது ஒருநாள் சதமாகும், இதன் மூலம் 101 போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 51.31 ஆக உயர்ந்துள்ளது.
“ராகுலால் அனைத்து சூழ்நிலைகளுக்கும் மற்றும் அனைத்து வகையான ஆடுகளங்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முடியும். அதனால்தான் அவரது சராசரியும் ஸ்டிரைக் ரேட்டும் இவ்வளவு சிறப்பாக உள்ளன.
அவர் தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில் வித்தியாசமாக விளையாடுவார். ஆனால் அவரிடம் உள்ள சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே விளையாடுகிறார்.”
“இருப்பினும் அவரது ஸ்டிரைக் ரேட் மிகச்சிறப்பாக இருக்கிறது. இது பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது. அவர் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்,” என்று ரஹானே தெரிவித்துள்ளார்.
ராகுலின் இந்த சிறப்பான ஆட்டத்தின் உதவியால், மூன்றாவது ஓவரில் 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 351/7 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

