ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நிலையில், தாய்நாடு திரும்பிய நட்சத்திர வீரர் இஷான் கிஷனின் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
ஜப்பானில் நடைபெற்ற போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்த இஷான் கிஷன், தாயகம் திரும்பிய உடனேயே விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
தங்கப் பதக்கத்துடன் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் வந்தடைந்தனர். நட்சத்திர வீரர்களைக் கண்டதும், அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களும் செய்தி ஊடகத்தினரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, இஷான் கிஷன் தனது செல்போனில் மிக முக்கியமான அழைப்பு ஒன்றில் தீவிரமாகப் பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தார். ஆனால், அவர் போனில் பேசுவதைப் பொருட்படுத்தாத புகைப்படக் கலைஞர்கள், அவரது கவனத்தைத் திருப்புவதிலும் படங்கள் எடுப்பதிலும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டனர்.
போனில் பேசிக் கொண்டிருக்கும் போது ஊடகத்தினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தியதாலும், இடைஞ்சல் செய்ததாலும் இஷான் கிஷனின் பொறுமை எல்லை கடந்தது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர், கேமராக்களுக்கு முன்பாகவே தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
“உங்களுக்கெல்லாம் ரொம்ப கெட்ட பழக்கம்… கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு?” என்று கடுமையாகச் சாடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எசியன் கேம்ஸ் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், அரையிறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் விளாசிய 80 ரன்கள், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற மிக முக்கியமான காரணியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

