Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Wednesday, October 28
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»அரசியல்»CM சார் உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது! விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!
அரசியல்

CM சார் உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது! விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

PrabhakaranBy PrabhakaranSeptember 25, 2026Updated:September 25, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, ‘த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி’ என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

“முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் சிஎம் சார்” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், “படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் தலமைச்சர் விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் டயலாக் டெலிவரியை-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.

அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, ‘த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி’ என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?

வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?

அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ‘பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென லைவ்-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?

கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?

“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி மோடில் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?

உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!

நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்!

பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் வெர்சுவல் அபூசர்களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.

“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் ஸ்கிரிப் பேப்பரை-ஐ அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்… பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!

இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?

கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.

ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் சிஎம் சார்.” இவ்வாறு ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.