Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Wednesday, October 28
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»கிரிக்கெட்»10 இன்னிங்ஸ்க்கு பின் இதுதான்டா ஸ்ரேயாஸ் ஐயர்! 42 பந்துகளில் சதம் அடித்து கம்பேக் கொடுத்த கேப்டன்!
கிரிக்கெட்

10 இன்னிங்ஸ்க்கு பின் இதுதான்டா ஸ்ரேயாஸ் ஐயர்! 42 பந்துகளில் சதம் அடித்து கம்பேக் கொடுத்த கேப்டன்!

PrabhakaranBy PrabhakaranOctober 6, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். கடந்த 10 இன்னிங்ஸாக ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக முன் நின்று கலக்கி இருக்கிறார். 28 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்த 14 பந்துகளில் சதத்தை எட்டி இருக்கிறார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கேப்டன் ஷாய் ஹோப் 52 ரன்களையும், ரூதர்ஃபோர்ட் 56 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நமன் திர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் அபிஷேக் சர்மா 21 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 35 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் – இஷான் கிஷன் கூட்டணி இணைந்தது.

அனைவரும் இஷான் கிஷன் அட்டாக் செய்வார், ஸ்ரேயாஸ் ஐயர் அமைதி காப்பார் என்று எதிர்பார்த்த போது, அப்படியே ரிவர்ஸ் ஆகியது. ஷமார் ஜோசப் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன் மூலமாக 28 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், பின்னர் கியரை மாற்றினார்.

இவ்வளவு நேரமாக வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே அட்டாக் செய்த ஸ்ரேயாஸ் ஐயர், இதன்பின் ஸ்பின்னர்களையும் ஒரு கை பார்த்தார். அரைசதம் அடித்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் முழுக்க முழுக்க சிக்சரிலேயே டீல் செய்தார். அதிலும் மேத்யூ ஃபேர்ட் வீசிய 14வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசினார். இதனால் சதம் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதற்கேற்ப 42 பந்துகளில் சிக்சர் அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணியின் டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். கடந்த 10 இன்னிங்ஸ்களாக ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். ஆனால் இந்த இன்னிங்ஸில் மொத்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.