நட்புக்கும் மனிதநேயத்திற்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெறும் 25 ஆயிரம் ரூபாய்க்காக நண்பனையே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேலைக்காகத் தனது நண்பனிடம் ஷௌகீன் என்பவர் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்த நிலையில், அந்தப் பணத்தைத் திருப்பித் தருமாறு நண்பன் கேட்டபோது அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பணத்தைத் திருப்பித் தர முடியாத ஆத்திரத்தில் திட்டமிட்டுக் கும்பல், நண்பனை ஏமாற்றித் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்த வைத்துவிட்டுப் பின்னர் கிணற்றில் தொடர்ந்து மூழ்கடித்துக் கொலை செய்துள்ளது.

மறுநாள் கிணற்றில் பிணம் மேலே மிதந்து வந்துவிடும் என்று பயந்த குற்றவாளிகள், உடனே அந்தச் சடலத்தைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து ஒரு வயலில் கொண்டுபோய் அவசரமாகப் புதைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல் நிலைய போலீசார், குற்றவாளிகளில் ஒருவன் கொடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வயலில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

