Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Wednesday, October 28
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»தமிழ்நாடு»TVK: மெழுகுவர்த்தி சண்டை இல்ல கௌரவச் சண்டை? – சர்ச்சையான நவல்பட்டு விஜி! பின்னணி என்ன?
தமிழ்நாடு

TVK: மெழுகுவர்த்தி சண்டை இல்ல கௌரவச் சண்டை? – சர்ச்சையான நவல்பட்டு விஜி! பின்னணி என்ன?

PrabhakaranBy PrabhakaranOctober 6, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
TVK: மெழுகுவர்த்தி சண்டை
TVK: மெழுகுவர்த்தி சண்டை
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

திருச்சியில் நடந்த அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு முன்பாக எம்.பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றியதால், தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோபமடைந்திருந்தார்.

அமைச்சர் ரமேஷ் அவரைச் சமாதானப்படுத்தி சூழலை இலகுவாக்கினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சபையில் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி ஏன் அப்படி கோபப்பட்டார் எனக் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய லோக்கல் தவெகவினர் சிலர், ”நவல்பட்டு விஜி ஒன்றும் ரசிகர் மன்றத்தில் இருந்தோ மக்கள் இயக்கத்தில் இருந்தோ வந்தவர் இல்லை. அவர் திமுகக்காரர். அங்கே கே.என்.நேரு Vs அன்பில் மகேஸ் பாலிட்டிக்ஸில் சிக்கி முக்கியத்துவம் இல்லாமல் இருந்தார். இவர் கே.என்.நேரு ஆதரவாளர் என்பதால் தொகுதிக்குள் அன்பில் மகேஸ் கேங் இவருக்கு மரியாதையே கொடுக்காது.

தேர்தல் நெருக்கத்தில் எங்களின் தலைமை அன்பில் மகேஸின் திருவெறும்பூர் தொகுதிக்கு ஒரு வலுவான வேட்பாளரைத் தேடியது. சிட்டிங் அமைச்சரின் தொகுதி என்பதால் பெரிதாக யாரும் நிற்க விரும்பவில்லை. நிற்கிறேன் என விருப்பம் தெரிவித்தவர்களும் வலுவானவராக இல்லை.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுதான் நவல்பட்டு விஜி சீனுக்குள் வருகிறார். லோக்கல் மா.செவைப் பிடித்து எங்களின் தலைமைக்குத் தூது விடுகிறார். மகேஸை எதிர்க்க திமுகவிலிருந்தே ஒரு ஆள் வருவதால் எங்களின் தலைமையும் அவரை வேட்பாளர் ஆக்கியது.

தமிழகம் முழுவதையும் போல திருவெறும்பூர் தொகுதியிலும் எங்களின் தலைவர் முகத்துக்காகத்தான் ஓட்டு விழுந்து விஜி வென்றார். ஆனால், அமைச்சரையே தோற்கடித்ததால் தலைமை தன்னைக் கவனித்து அமைச்சர் பதவி வழங்கும் என எதிர்பார்த்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வென்ற ரமேஷை அமைச்சராக்கிவிட்டு, துறையூரில் வென்ற ரவிசங்கரை துணை சபாநாயகராக்கிவிட்டு இவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். எம்.எல்.ஏ ஆனவுடன் ஏற்கனவே கட்சியில் இருக்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு தன்னுடைய ஆட்களை கட்சிக்குள் நுழைக்க முயன்றார்.

அதனால் லோக்கல் நிர்வாகிகளுக்கும் விஜிக்கும் முட்டிக் கொண்டது. பனையூரில் நடந்த ஓர் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலேயே ஆதவ் அர்ஜுனாவிடம் கொஞ்சம் ஏத்தமாக, ‘நாங்கெல்லாம் எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிங்க யாரும் எங்களை மதிக்கிறது இல்ல. கொஞ்சம் கண்டிச்சு வையுங்க’ என எகிறியிருந்தார்.

‘வேறு கட்சியிலிருந்து வந்த உங்களுக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கியதே பெருசு. பக்குவமாக நடந்துக் கொள்ளுங்கள்’ என ஆதவ்வும் விஜியை எச்சரித்துவிட்டார்.

TVK: மெழுகுவர்த்தி சண்டை
TVK: மெழுகுவர்த்தி சண்டை

 

எம்.எல்.ஏக்களை மாவட்டச் செயலாளர் ஆக்கியபோது திருவெறும்பூரின் மா.செவாக விஜியை நியமித்தார்கள். திமுகவில் மா.செக்கள் குறுநில மன்னர்கள் போல இருப்பார்கள். மாவட்டத்துக்குள் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கட்சியின் தலைவர்களும் அமைச்சர்களும் மா.செவுடன் கலந்தாலோசிக்காமல் மாவட்டத்துக்குள் வரமாட்டார்கள். ஆனால், இங்கே மாவட்டச் செயலாளர் பதவிக்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது.

அது ஒரு நிர்வாக வசதிக்கான பதவி மட்டுமே. மாவட்ட அமைச்சர்களும் தலைமையுமே எல்லா முடிவையும் எடுக்கும். சிட்டிங் அமைச்சரைத் தோற்கடித்ததற்கு அமைச்சர் பதவியும் கொடுக்கவில்லை. அதிகாரமில்லாத மா.செ பதவியைக் கொடுத்து உட்கார வைத்துவிட்டார்களே எனும் ஆதங்கம் அவரிடம் உண்டு.

இந்த நிகழ்ச்சியிலும் சீனியர் எம்.எல்.ஏவான இவர் நிற்கும்போது அமைச்சர் ரமேஷ் முசிறி விக்னேஶூக்கு மெழுகுவர்த்தியைக் கொடுத்துவிட்டார். அவரும் ஏற்றிவிட்டு விஜியிடம் மெழுகுவர்த்தியைக் கொடுக்காமல் காங்கிரஸ் எம்.பியிடம் கொடுத்துவிட்டார். ஏற்கனவே ஆதங்கத்தில் இருக்கும் விஜியை இது இன்னும் கடுப்பேற்றிவிட்டது.

அதனால்தான் மேடையிலேயே கொந்தளித்துவிட்டார். ஆனாலும், விஜியின் இடத்தில் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்த ஒரு ஆள் இருந்திருந்தால் அமைதியாகத்தான் போயிருப்பார். இவர்தான் இப்படி அவசரப்பட்டு ரியாக்ட் செய்து நெகட்டிவ் ஆக்கிவிடுகிறார். இதை எங்களின் தலைமை ரசிக்காது” என்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
TVK: மெழுகுவர்த்தி சண்டை
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

October 8, 2026

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு! நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு!

October 7, 2026

இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்! தாய் தந்தையை இழந்த சிறுவன் உதவி கோரிய வீடியோ! நடிகர் KPY பாலாவின் அதிரடி ரியாக்ஷன்!

October 6, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.