தாய் தந்தையை இழந்து தவித்து வரும் சிறுவனுக்கு உதவி கோரி வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சிறுவன், “எனக்கு அம்மா உடல்நிலை சரியில்லாம இறந்துட்டாங்க, அப்பாவும் உடல்நிலை சரியில்லாம இறந்துட்டாங்க. எனக்கு படிக்க கூட வசதி இல்ல, யாராவது ஹெல்ப் பண்ணுங்க” என உருக்கமாக கேட்டிருந்தான்.
இந்த வீடியோவை பார்த்த நடிகர் KPY பாலா, உடனடியாக அந்த சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார்.

சிறுவனின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகவும், அவனுக்கு வீடு கட்டி தருவதாகவும் நடிகர் பாலா உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே பல ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் பாலாவின் இந்த மனிதநேய செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

