Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏
  • 🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡
  • 🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱
  • 🚨🔥 226 ரன்களும் பாதுகாப்பில்லை! 430 ரன்களும் பாதுகாப்பில்லை! ஒரே நாளில் கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தியா, இலங்கை! டேரன் சமியின் வைரல் பதிவு! 🏏😱🌍
  • 🚨🔥 17 ஆண்டுகால இர்ஃபான் பதானின் சாதனை காலி! வெறும் 15 பந்துகளில் வரலாறு படைத்த நமன் திர்! இந்திய அணிக்கு புதிய பினிஷர் கிடைத்துவிட்டாரா? 🇮🇳🏏😱
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம்! 2வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்! 15 வயது அதிரடி வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா? 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Tuesday, October 27
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»தமிழ்நாடு»ஜெம் வீரமணி வழக்கு ஆரம்பத்திலேயே நீர்த்துப்போனது ஏன்? காவல்துறையின் அலட்சியமா?’-விளக்கும் ஏசிபி ராஜாராம்
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு ஆரம்பத்திலேயே நீர்த்துப்போனது ஏன்? காவல்துறையின் அலட்சியமா?’-விளக்கும் ஏசிபி ராஜாராம்

PrabhakaranBy PrabhakaranSeptember 25, 2026Updated:September 25, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ஜெம் வீரமணி வழக்கு
ஜெம் வீரமணி வழக்கு
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

தமிழ்நாட்டில் ஜெம் வீரமணி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில், ஆரம்பத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட போதிலும் விசாரணை ஏன் முடக்கப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாகத் தகவல்கள் திரட்டப்பட்டும், வழக்கு கைவிடப்படும் நிலைக்குச் சென்றதன் பின்னணியில் உள்ள குளறுபடிகள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.Advertisment இந்நிலையில் முன்னாள் ஏசிபி ராஜாராம் இதுகுறித்து நக்கீரன் டிவியின் நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது, “இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் வழக்கைப்பதிவு செய்து விசாரித்த முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் மிக முக்கியமான காரணம்.

அவர்கள் அக்டோபர் 6, 2025 அன்று புகார் பெற்று, அடுத்த நாளே எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

எப்.ஐ.ஆர் போட்ட பிறகு விசாரணை என்பது நேர்மையான முறையில், சரியான திசையில் நகர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், அங்கு அது நடக்கவில்லை.

வழக்கிற்கு ஆதாரமாக இருந்த வீடியோ உண்மையானதா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் மூலமாகத் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உடனடியாகக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.Advertisment அதைச் செய்யாமல், அவர்கள் நேரடியாக வீரமணியிடமே விசாரணை நடத்தியுள்ளனர்.

எந்தக் குற்றவாளியாவது ‘நான்தான் இந்தக் குற்றத்தைச் செய்தேன்’ என்று ஒப்புக்கொள்வாரா? நிச்சயமாக மாட்டார், ‘நான் இல்லை’ என்றுதான் சாதிப்பார்.

அப்படியிருக்கும்போது, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் குற்றத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

ஜெம் வீரமணி வழக்கு
ஜெம் வீரமணி வழக்கு

இன்றைக்குத் திருவிழாக் கூட்டங்களில் குற்றவாளிகளைக் கண்டறிய ‘ஃபேஸ் ரெகக்னிஷன் ஆப்’ போன்ற செயலிகளைப் பயன்படுத்துகிறோம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் கூடப் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை அப்லோடு செய்து வைத்தால், அவர்கள் நடமாடுவதை அந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அதிமுக்கியமான போக்சோ வழக்கில் ஏன் அத்தகைய அறிவியல் பூர்வமான விசாரணையை அவர்கள் கையாளவில்லை என்பது பெரிய கேள்விக்குறி? அதுமட்டுமன்றி, சாட்சிகளைத் திரட்டிய முறையும் மிகவும் வேடிக்கையாக உள்ளது.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் வீட்டின் அருகில் உள்ள பஞ்சர் கடைக்காரரிடமும், ஒரு கண் மருத்துவமனையின் வரவேற்பாளரிடமும் போய் இந்த வீட்டுக்குப் பெண்கள், குழந்தைகள் வருகிறார்களா என்று கேட்டுள்ளனர்.

தெரு முனையில் இருப்பவருக்கு அந்த வீட்டிற்குள் யார் போகிறார்கள் என்று எப்படித் துல்லியமாகத் தெரியும்? அவர்கள் ‘தெரியாது’ என்று சொன்னதையே வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், வீடியோ 2019 இல் எடுக்கப்பட்டது, இப்போது அதற்கான சாப்ட்வேர் இல்லை, குழந்தையை அடையாளம் காண முடியாது போன்ற பலவீனமான காரணங்களைக் கூறி, வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

ஒரு போக்சோ வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஆனால், இவர்கள் குற்றவாளியைக் கைது செய்யாமல் வழக்கை முடிக்கப் பார்த்தனர்.

அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்திற்கு அனுப்பியதே காவல்துறையின் ஆரம்பக்கட்ட தோல்வியைக் காட்டுகிறது” என்றார்.”

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
ஜெம் வீரமணி வழக்கு
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

October 8, 2026

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு! நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு!

October 7, 2026

TVK: மெழுகுவர்த்தி சண்டை இல்ல கௌரவச் சண்டை? – சர்ச்சையான நவல்பட்டு விஜி! பின்னணி என்ன?

October 6, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.