திட்டுற முதலாளிகளுக்கு மத்தியில் தாராள மனசோட ஒரு பாஸ்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் முதலாளி, தனது ஊழியர்கள் அனைவரையும் அவசர மீட்டிங் ஒன்றிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஏதோ வேலை சம்பந்தமான சீரியஸான மீட்டிங் அல்லது இலக்குகள் குறித்த கண்டிப்பான உரையாடலாகத்தான் இருக்கும் என்று எண்ணி, சற்று பதற்றத்துடனேயே ஊழியர்கள் அனைவரும் கூட்ட அரங்கிற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால், மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்த ஊழியர்களுக்கு அங்கே காத்திருந்தது முற்றிலும் எதிர்பாராத ஒரு பேரதிர்ச்சி. ஊழியர்களின் அர்ப்பணிப்பான உழைப்பையும், நிறுவனத்திற்கு அவர்கள் ஈட்டித் தந்த மாபெரும் வெற்றியையும் பாராட்டிப் பேசிய அந்த முதலாளி, மேஜையின் மீதிருந்த கவர்களைப் பிரித்து ஒவ்வொரு ஊழியரின் கையிலும் பிராண்ட் நியூ ஐபோன்களைக் கொடுத்து அசத்தியுள்ளார்.
வழக்கமான மீட்டிங் என்று நினைத்து வந்த இடத்தில், கைகளில் லட்சக்கணக்கிலான மதிப்புள்ள ஐபோன் பெட்டிகள் அலங்கரிப்பைக் கண்ட ஊழியர்கள், மகிழ்ச்சியில் உறைந்துபோய் ஆனந்தக் கண்ணீருடன் தனது முதலாளிக்கு நன்றி தெரிவித்தனர். இந்தச் நெகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துத் தீயாய் பரவி வருகிறது.

மேலும் “ஊழியர்களை வெறும் வேலை ஆட்களாகப் பார்க்காமல், நிறுவனத்தின் தூண்களாக மதித்து அவர்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தைக் கொடுக்கும் இப்படிப்பட்ட ஒரு பாஸ் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என நெட்டிசன்கள் அந்த முதலாளியைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்களின் மன நிறைவே நிறுவனத்தின் உண்மையான வெற்றி என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம், கார்ப்பரேட் உலகிற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

